ரஷ்ய போரால் உக்ரைனுக்கு எவ்வளவு இழப்பு தெரியுமா?.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

ரஷ்யா தொடுத்து வரும் போரால் உக்ரைனுக்கு 45 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய போரால் உக்ரைனுக்கு எவ்வளவு இழப்பு தெரியுமா?.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து நேற்றுடன் 100 நாட்கள் முடிந்து விட்டன. இன்னும் போர் ஓய்ந்த பாடில்லை. இந்த போரில், உக்ரைனிய நகரங்களின் கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், ராணுவ கட்டமைப்புகள் ரஷியாவின் தாக்குதலில் சின்னாபின்னமாகி உள்ளன.

உக்ரைனில் ரஷியா ஏற்படுத்தி உள்ள சேதங்களை அந்நாடு மதிப்பிட்டுள்ளது. அதன்படி சுமார் 600 பில்லியன் டாலர் அதாவது 45 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது என்று உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு உக்ரைனில் சிறிதளவு உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள இரு நகரங்களில் ஒன்றான லைசிசான்ஸ்க் நகரில் 60 சதவீத உள்கட்டமைப்புகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் ரஷிய படைகளின் தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளன.

உக்ரைனில் போர்க்குற்றங்கள், மனித உரிமைகள் மீறல்கள் அரங்கேறி இருப்பது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஐ.நா.வின் சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையம் 3 மனித உரிமைகள் நிபுணர்களை விசாரணைக்காக அங்கு அனுப்புகிறது.

உக்ரைனில் நடந்துள்ள போர்க்குற்றங்களுக்கு ரஷியாவை பொறுப்பேற்க வைக்க வேண்டும் என்று அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் வலியுறுத்தி உள்ளன. உக்ரைனில் தலைநகரை பிடிக்க முடியாத சூழ்நிலையில் கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியை முற்றிலுமாக கைப்பற்றுவதில் ரஷிய படைகள் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றன.