போதைப்பொருள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஃபின்லாந்து பிரதமர்......!!!!!

ஃபின்லாந்தின் பிரதமர் அந்த நாட்டின் பாப்ஸ்டார்களுடன் நடனமாடும் வீடியோ வெளியானதை தொடர்ந்து போதைப்பொருள் சோதனைச் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

போதைப்பொருள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஃபின்லாந்து பிரதமர்......!!!!!

சன்னா மரின் 36 வயதான ஃபின்லாந்தின்  இளம் பிரதமர்.  அவர் குடித்து விட்டு அவருடைய நண்பர்களுடன் நடனமாடும் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரப்பட்டது.

சன்னா மரின் விளக்கம்:

நேற்று செய்தியாளர்களை சந்தித்த மரின் அவர் சோதனையை செய்து கொண்டதாகவும் அடுத்த வாரத்தில் முடிவுகள் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.  மேலும் இதுவரை தான் எப்போதும் போதைப்பொருள் எடுத்துக்கொண்டதில்லை எனவும் கூறியுள்ளார்.

மரின் சட்டவிரோதமாக எதுவும் செய்யவில்லை எனவும் தன்னுடைய டீன் வயதில் கூட எந்த வகையான போதைப் பொருள்களையும் பயன்படுத்தியதில்லை எனவும் பேசியுள்ளார்.  அனைவரது சந்தேகத்தையும் களையவே போதைப்பொருள் பரிசோதனை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.  தான் குற்றமற்றவர் எனவும் மேலும் கூறியுள்ளார் சன்னா மரின்.

பார்ட்டியின் போது தான் படமாக்கப்படுவது தெரியும் எனவும் ஆனால் அவை பகிரங்கமாக வெளியிடப்படும் என தான் எதிர்பார்க்கவில்லை எனவும் இது மிகவும் கவலை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார் சன்னா மரின்.  மேலும் ஓய்வு நேரத்தையும் வேலை நேரத்தையும் மக்கள் வேறுவேறு என்பதை புரிந்து கொள்வார்கள் என தான் நம்புவதாக கூறியுள்ளார் சன்னா.

எதிர்கட்சிகள் விமர்சனம்:

இதைக்குறித்து எதிர்கட்சிகள் விமர்சனம் தெரிவித்துள்ளன.  நாட்டில் மிக முக்கியமான பல பிரச்சினைகள் உள்ளன எனவும் அதை தவிர்த்து விட்டு இது போன்ற செயல்களில் கவனம் செலுத்துவது மோசமானது என பிரதமரையும் ஊடகங்களையும் கண்டித்துள்ளது. 

சிறந்த பிரதமர்:

2019 முதல் ஆட்சியில் இருக்கும் மரின் சிறந்த ஆட்சியாளர் என்ற பெயர் பெற்றவர்.  கடந்த வாரம் ஒரு செய்தி நிறுவனத்தால் “உலகின் சிறந்த பிரதமர்” என்ற பெயர் பெற்றவர்.

இதையும் படிக்க: அகிம்சை நாயகன் சிலை மீது வன்முறை தாக்குதல்....ஏன் இந்த வெறுப்பு!!!!