யுகடான் தீபகற்பத்தில் கடலில் பற்றி எரிந்த தீ...

மெக்ஸிகோ பகுதியில் உள்ள யுகடான் தீபகற்பத்தில் எண்ணெய் கசிவினால் கடல்பகுதி தீப்பற்றி எரிந்துள்ளது.

யுகடான் தீபகற்பத்தில் கடலில் பற்றி எரிந்த தீ...
மத்திய அமெரிக்காவில் மெக்ஸிகோ வளைகூடாவில் காம்பேச் விரிகுடா முதல் கரீபியன் கடல் வரை நீண்டுள்ளது யுகடான் தீபகற்பம். இது சுமார் 181,000 கிமீ பரப்பளவில் உள்ளது, இந்த தீபகற்பம் முற்றிலும் சுண்ணாம்புக் கற்களால் ஆனது. இந்த தீபகற்பத்தில் மெக்சிகோ நாட்டின் தேசிய எண்ணெய் நிறுவனமான பெமெக்ஸ் பல ஆண்டுகளாக இங்கு கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. பெமெக்ஸின் மொத்த எண்ணெய் உற்பத்தயில் கிட்டத்தட்ட 40% இந்த தீபகற்பத்தில் இருந்துதான் வருகிறது.
 
கடந்த ஜூலை 2ஆம் தேதி அன்று எண்ணெய் எடுக்கும் இடத்திலிருந்து சிறிது தூரத்தில் கடலில் தீப்பற்றி எரியத்து தொங்கியது. கடலுக்கடியில் உள்ள வாயுக்கள் கசிந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது என்று பெமெக்ஸ் கம்பெனி கூறியுள்ளது.  ஒரு அடி விட்டமுள்ள இந்தக் குழாய், கடல் மட்டத்திலிருது 78 மீட்டருக்கு இருந்துள்ளது. மின்சார பிரச்சனைகள் காரணமாகவும் அல்லது மழைப் பொழிவு காரணமாகவும் வாயுக்கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்திருக்கின்றன. 'Eye of fire' என்ற பெயரில் இதன் வீடியோக்கள் வைரலாகியது.
 
தொடர்ந்து ஐந்து  மணி நேரம் எரிந்துள்ள இந்த விபத்தில் தீ எரிவதற்கு நிச்சயம் எரிவாயு தேவை, நிச்சயம் அது கசிவிலிருந்துதான் வந்திருக்க வேண்டும். ஆனால் கசிவுகள் எதுவும் ஏற்படவே இல்லை என்று சொல்கிறது எண்ணெய் நிறுவனம்.  ஒருவேளை கசிவு ஏற்பட்டிருந்தாலும் அது அங்கேயே எரிந்து முடிந்திருக்கக் கூடும் என்கிறார்கள் வேதியியலாளர்கள்.
 
கடல் சூழலுக்கு என்னமாதிரியான பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று தெரியவில்லை. கடலின் வேதியியல், வெப்பநிலை, கடல்வாழ் உயிரினங்கள்  போன்றவற்றில் எந்த அளவுக்கு பாதிப்பை இந்த விபத்து ஏற்படுத்தியிருக்கும் என்பது தெரியவில்லை. விபத்தினால் பலவீனமடைந்துள்ள குழாயில் பிற்காலத்தில் மேலும் பிரசச்சனைகள் வந்தால் அதற்கு எந்த விதமான முன்னேற்பாடுகளை வைத்திருக்கிறது அந்நிறுவனம் என்பது தான் முக்கியமான கேள்வி.
 
ஏற்கனவே பல குற்றச்சாட்டுகளுக்கு பேர் போனது பெமெக்ஸ் நிறுவனம். சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் நிறுவனங்களில் பட்டியலில் தொடர்ந்து பல ஆண்டுகளாக இடம் பெற்றிருக்கிறது இந்நிறுவனம்.  ஒரு தனி நிறுவனத்தின் அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்து என்று இதை ஒதுக்கிவிட முடியாது. தொடர் விபத்துக்கள், மனித உரிமை மீறல்கள், சுற்றுச்சூழல் மாசு பற்றிய குற்றச்சாட்டு போன்ற பிரச்சனைகளுக்கு நடுவே பெமெக்ஸ் தன் வேலைகளை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
 
இதேபோன்று ஜூலை 4ஆம் தேதி அன்று காஸ்பியன் கடலிலும் ஒரு பெரிய வெப்பு ஏற்பட்டு அங்கும் தீப்பிழம்புகள் காணப்பட்டன. சோகார் எண்ணெய் நிறுவனம், இது மண் எரிமலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு என்று தெரிவித்திருக்கிறது. வெடிப்பு நடந்த இடத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலேயே எண்ணெய்ப் படுகைகள் இருக்கின்றன. அதனால் எண்ணெய் எடுப்பதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றும் அந்த நிறுவனம் சொல்கிறது.
 
அடுத்தடுத்து கடல் தீப்பற்றி எரிந்த நிகழ்வுகள் உலகம் முழுவதும் ஒரு பரபரப்பை உண்டாக்கியிருக்கின்றன என்பது உண்மை.