விண்ணில் இருந்து பூமியை ரசிக்க பறக்கும் பலூன் சுற்றுலா

விண்ணில் இருந்து பூமியை ரசிக்கும் பறக்கும் பலூன் சுற்றுலா திட்டத்தை, குறைந்த விலையில் வேர்ல்டு வியூ நிறுவனம் தொடங்க உள்ளது.

விண்ணில் இருந்து பூமியை ரசிக்க பறக்கும் பலூன் சுற்றுலா

அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள வேர்ல்டு வியூ நிறுவனம், சுற்றுசூழலுக்கு உகந்த முறையில் பலூன் தொழில்நுட்பம் மூலம் வாடிக்கையாளர்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளது.

வெப்ப காற்றில் இயங்கும் பலூனை போல் இல்லாமல், ஹீலியம் வாயுவை பயன்படுத்தி, பலூனை மெல்ல மெல்ல பல ஆயிரம் அடி உயரதிற்கு பறக்கவிட திட்டமிடப்பட்டுள்ளது.

2024-ம் அண்டு முதல் தொடங்கும் சுற்றுலா சேவையில், முற்கட்டமாக சீன பெருஞ்சுவர், எகிப்து பிரமிட், அமேசான் காடுகள் உள்ளிட்ட இடங்களை, விண்ணிலிருந்து பார்க்கும் வகையில் பயணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பயணம்  ஆறு முதல் எட்டு மணி நேரம் நீடிக்கும் என்றும், பயணிகளை குறைந்தது 1 லட்சம் அடி உயரத்திற்கு அழைத்து செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.