சர்வதேச விண்வெளி தளத்தில் பறக்கும் தட்டு..! நாசா வெளியிட்ட தகவல்.! 

சர்வதேச விண்வெளி தளத்தில் பறக்கும் தட்டு..! நாசா வெளியிட்ட தகவல்.! 

சர்வதேச விண்வெளி தளத்தின் மேல், பத்துக்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத மர்ம பொருள் பறந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. 

UFO என்று அழைக்கப்படும் பறக்கும் தட்டுகள் பற்றிய கதைகள் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. இதை போன்ற பறக்கும் தட்டுகளை வேற்றுகிரக வாசிகள் பூமிக்கு வருவதாக பல்வேறு தரப்பு மக்கள் கூறிவருகிறார்கள். மேலும்,  பறக்கும் தட்டுகள் பற்றிய  வீடியோ காட்சிகளும் இணையத்தில் உலா வருகின்றன. 

ஆனால் அந்த வீடியோ காட்சிகளில் பல ஜோடிக்கப்பட்டவை என்று நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் நாசா போன்ற நிறுவனங்களும் இதை மறுத்தே வந்தன. இந்நிலையில் தற்போது சர்வதேச விண்வெளி தளத்தின் மேல், பத்துக்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத மர்ம பொருள் பறந்துள்ளதாக நாசாவே கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நாசாவின் நேரடி ஒளிப்பரப்பிலிருந்து, கழுகு பார்வை புகைப்படத்தை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பகிர்ந்துள்ள விண்வெளி ஆர்வலர் ஒருவர், தெற்கு அட்லாண்டிக் கடல் பரப்புக்கு மேல் இந்த காட்சி படம்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை யூடியூப் உள்ளிட்ட வலைதளத்தில் பலரும் விண்வெளி சார்ந்த தங்களுக்கு தெரிந்த கோட்பாடுகளை தெரிவித்து வருகின்றனர்.