பல்வேறு நாடுகளுக்கு ஆட்டம் காட்டி வரும் காட்டு தீ.. எச்சரிக்கையுடன் இருக்க ஐரோப்பிய ஒன்றியம் அறிவுறுத்தல்!

பல்வேறு நாடுகளில் காட்டுத் தீ பரவி வருவதால் ஐரோப்பா முழுமையும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி ஐரோப்பிய ஒன்றியம் அறிவுறுத்தியுள்ளது.

பல்வேறு நாடுகளுக்கு ஆட்டம் காட்டி வரும் காட்டு தீ.. எச்சரிக்கையுடன் இருக்க ஐரோப்பிய ஒன்றியம் அறிவுறுத்தல்!

ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுக்கல், துருக்கி, கிரீஸ் என பல்வேறு நாடுகளில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.

பத்து நாட்களாக பல ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், விமானங்கள் ஆகியவை பணியில் ஈடுபட்டிருந்தாலும் இதுவரை தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் அரசுகள் திணறி வருகின்றன.

இந்த நிலையில், 70 ஆண்டுகளில் இல்லாத கடுமையான வறட்சி நிலவுவதாக கூறப்படும் இத்தாலியிலும் காட்டுத் தீ பரவத் தொடங்கி விட்டது. பைன் மரக்காடுகளுக்கு இடையே உள்ள சோள வயலில் பற்றிய தீ வனப்பகுதியை சுற்றி வளைத்து பரவி வருகிறது.

இதேபோல் மொரோக்கா நாட்டிலும் நகருக்கு அருகிலேயே உள்ள வனப்பகுதியில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.

பல்வேறு நாடுகளில் பரவி வரும் காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தீயால் ஏற்பட்டுள்ள வெப்பத்தின் தாக்கத்தால் இதுவரை 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் உச்சகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவுறுத்தியுள்ளது.