ரூபிளில் மட்டுமே எரிவாயு ஏற்றுமதி-அதிரடி காட்டும் புதின்.. ஜெர்மன் எச்சரிக்கை?

ரஷ்யாவின் செயலால் ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட உள்ளதாக ஜெர்மனி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரூபிளில் மட்டுமே எரிவாயு ஏற்றுமதி-அதிரடி காட்டும் புதின்.. ஜெர்மன் எச்சரிக்கை?

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை அமல்படுத்தியுள்ளன.

ஆனாலும், தாக்குதலைக் கைவிடாத ரஷ்ய அதிபர் புதின், தடைகளை நொறுக்கும் விதமாக ரஷ்யாவின் ரூபிளில்தான் எரிவாயு விநியோகம் செய்யப்படும் என்று அதிரடியாக அறிவித்தார். ஆனால், இது குறித்து ஐரோப்பிய நாடுகள் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

இதையடுத்து ரூபிள் இல்லையென்றால் எரிவாயு கிடையாது என்பது உறுதி என்று ரஷ்ய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். இந்தநிலையில்தான் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட உள்ளதாக முன்கூட்டியே எச்சரிப்பதாக ஜெர்மன் பொருளாதாரத்துறை அமைச்சர் ராபர்ட் ஹேபெக் தெரித்துள்ளார்.

எரிவாயு விநியோகத்தை ரஷ்யா நிறுத்தும் முன் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஜெர்மனியைப் பொறுத்தவரை ரஷ்ய எரிவாயு இறக்குமதியை படிப்படியாக குறைத்தாலும் 2024-ம் ஆண்டுவரை ரஷ்ய எரிவாயுவைச் சார்ந்துதான் இருக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் ஹேபக் குறிப்பிட்டுள்ளார்.