முன்னாள் காதலனின் வாகனத்திற்கு தீ வைத்த காதலி!!

ஃப்ரேக்கப் செய்ததால் காதலனின் வாகனத்திற்கு தீ வைத்த காதலி

முன்னாள் காதலனின் வாகனத்திற்கு தீ வைத்த காதலி!!

தாய்லாந்தில் காதலனுடன் ஏற்பட்ட மனகசப்பால் அவரது இருசக்கர வாகனத்திற்கு காதலி தீயிட்டு கொளுத்தியுள்ளார்.

காதலர்களில் ஏதேனும் சண்டை ஏற்பட்டாலோ அல்லது இருவரும் பிரிந்து விட்டாலோ காதலன் காதலியை துரத்தி துரத்தி டார்ச்சர் செய்வதை நாம் கேள்விப்பட்டிருப்போம், திரைப்படங்களிலும் பார்த்திருப்போம். ஆனால் இங்கு காதலுடன் ஏற்பட்ட பிரச்னையால், அவருக்கு ரிவன்ச் கொடுத்துள்ளார் காதலி.

தாய்லாந்தை சேர்ந்த 36 வயதனான க்னாக் வான் என்றப் பெண்மனியை அவரது காதலன் பிரிந்து சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த க்னாக் வான், தனது காதலனின் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். 

அவர் வைத்த தீ, காதலனின் இருசக்கர வாகனத்தை மட்டுமல்லாது, பார்க்கிங்கில் நிறுத்தி வைத்திருந்த மேலும் 6 வாகனத்தையும் தீக்கரையாக்கியது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். க்னாக் வான் இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. 

சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், க்னாக் வானை கைது செய்தனர். 
இருவரும் பிரிவதற்கு முன்பு க்னாக் வான் தனது காதலுனுக்கு பரிசாக அந்த இருசக்கர வாகனத்தை பரிசாக கொடுத்தது குறிப்பிடத்தக்கது.