இனி பெண்கள் மேல் நிலைப்பள்ளி திறக்கப்படும் - பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்த தாலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி திறக்கப்படும் என தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

இனி பெண்கள் மேல் நிலைப்பள்ளி திறக்கப்படும் - பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்த தாலிபான்கள்!

ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய பிறகு, பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்த நிலையில், சில நிபந்தனைகளுடன் பள்ளிகளை திறக்குமாறு தாலிபான்கள் காபூல் மாகாண கல்வி துறைகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

அதன்படி, பெண்கள் மேல் நிலை பள்ளி திறக்கப்படும் என்றும், 6ஆம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவிகளும், ஆசிரியர்களும் ஹிஜாப் அணிந்து முகத்தை மறைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பெண்கள் மட்டுமே பள்ளிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், பள்ளிக்கு செல்லும் வழியில் மாணவிகள், நண்பர்கள் யாரையும் சந்திக்க செல்ல கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.