மேற்கு ஐரோப்பாவில் கனமழை... 100க்கும் மேற்பட்டோர் பலி...

மேற்கு ஐரோப்பிய பிராந்தியத்துக்கு உட்பட்ட ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து, பிரான்சு உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் வரலாறு காணாத மழையில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

மேற்கு ஐரோப்பாவில் கனமழை... 100க்கும் மேற்பட்டோர் பலி...

ஜெர்மனியின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக குடியிருப்புகள் வெள்ளக்கடாக மாறியுள்ளன. சாலைகள் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அத்தியாவசியத்தேவைகளுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜெர்மனியில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீட்பு படையினர் மற்றும் ராணுவ வீரர்கள், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் இதேபோல் பெல்ஜியத்தின் மியூஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பட இடங்களில வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அண்டை நாடான நெதர்லாந்தின் பெசல் நகரிலும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் மழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் கனமழைக்கு பலியாகியுள்ளனர்.