ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் வரலாற்று சாதனை...  4 பேருடன் வெற்றிகரமாக பயணம்...

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சுற்றுலா விண்கலம், 4 பேருடன் வெற்றிகரமாக விண்வெளிக்கு பயணித்துள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் வரலாற்று சாதனை...  4 பேருடன் வெற்றிகரமாக பயணம்...

இந்திய நேரப்படி நேற்று  அதிகாலை 5.32 மணியளவில் விண்கலம், 4 சுற்றுலா பயணிகளுடன் புளோரிடாவில் உள்ள விண்வெளி மையத்திலிருந்து விண்வெளிக்கு புறப்பட்டது. இதன்மூலம் மக்களை சுற்றுலா அனுப்பும் எலன் மஸ்க்கின் திட்டம் முதல்கட்டமாக வெற்றி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்பிரேஷன் - 4 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம் 3 நாட்கள் விண்வெளி பயணத்திற்கு பிறகு அட்லாண்டிக் கடலில் வெற்றிகரமாகத் தரையிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறையான பயிற்சிபெற்று அதிகாரபூர்வ பயணத்தை மட்டுமே விண்வெளி வீரர்கள் மேற்கொண்டு வந்த நிலையில், முதல் முறையாக, பொதுமக்கள் 4 பேர் விண்வெளிக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.