அமெரிக்காவை புரட்டி எடுத்த இடா புயல்: நியூயார்க் நகரில் அவரசநிலை பிரகடனம்...

அமெரிக்காவை புரட்டி எடுத்த இடா புயல்: நியூயார்க் நகரில்  அவரசநிலை பிரகடனம்...

நியூ யார்க் நகரில் கனமழை காரணமாக மெட்ரோ ரயிலில் வெள்ள நீர் கொட்டும் காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தொடர் மழை வெள்ளத்தில் அங்கு அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா வட கிழக்கு மாகாணங்களில் 'இடா' புயல் காரணமாக கனமழை பெய்துவருகிறது. இதையடுத்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல்வேறு மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்கள் மூடப்பட்டு நியூ யார்க் மற்றும் நியூ ஜெர்சியில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.தெற்கு மாகாணமான லூசியானாவில் 'இடா' புயல் மற்றும் சூறாவளி காரணமாக தீவிரமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாகாணத்தின் வடக்கு பகுதிகள் பெரும் பாதிப்படைந்தன.

 

புரூக்ளின் மற்றும் குயின்ஸ் பகுதி வெள்ளத்தால் சூழ்ந்த நிலையில், அவசர நிலை பிரகடனத்தை நியூ யார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் அறிவித்தார்.இந்த நிலையில் நியூயார்க் நகரில் மெட்ரோ ரயிலின் மேல் வெள்ள நீர் கொட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.