ஆப்கான் நிலவரம் குறித்து வெளியுறவு அமைச்சா்கள் முக்கிய ஆலோசனை! இனி நடக்கப்போவது என்ன?

ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் டொமினிக் ராப்புடன் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் ஆலோசனை நடத்தினாா். 

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி கைப்பற்றியது முதல், அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன் போன்ற நாடுகளுடன் இந்தியா தொடா் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகள் திங்கள்கிழமை நள்ளிரவு முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டன. அதனைத் தொடா்ந்து, ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கையை தலிபான்கள் தீவிரப்படுத்தியுள்ளனா்.

இந்தச் சூழலில், பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் டொமினிக் ராப்புடன் ஜெய்சங்கா் நேற்று ஆலோசனை நடத்தினாா். முன்னதாக, ராப்புடன் கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து ஜெய்சங்கா் ஆலோசனை நடத்தியிருந்தாா். இதுகுறித்து தெரிவித்த ஜெய்சங்கா், பிரிட்டன் வெளியுறவு அமைச்சருடனான ஆலோசனை சிறப்பாக அமைந்தது என்றும், அதில் ஆப்கன் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளாா்.  தொடா்ந்து ஓமன் நாட்டு வெளியுறவு அமைச்சா் சையது பதா் அல் புசைதியுடனும் ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து ஜெய்சங்கா் நேற்று ஆலோசனை நடத்தினாா்.