2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா - வங்கதேச கூட்டு ஆலோசனைக் கூட்டம்..!

2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா - வங்கதேச கூட்டு ஆலோசனைக் கூட்டம்..!

இந்தியா - வங்கதேச கூட்டு ஆலோசனைக் கூட்டம் 2 ஆண்டுகளுக்குப்பின் இன்று நேரடியாக டெல்லியில் நடைபெற உள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி இந்திய - வங்கதேச கூட்டு ஆலோசனைக் குழுவின் 7வது கூட்டம் டெல்லியில் நேரடியாக நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் இருதரப்புக்கு இடையேயான எல்லை மேலாண்மை, பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு மற்றும் வளர்ச்சிக் கூட்டாண்மை குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்குப்பின் நேரடியாக நடைபெறும் இக்கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ. கே.அப்துல் மொமன் ஆகியோர் பங் கேற்க உள்ளனர்.