உலக பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா....வெளியுறவுதுறை அமைச்சர் பெருமிதம்!!!

உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.  இந்தியாவை ஒரு முக்கிய உற்பத்தி மையமாக மாற்றுவதே இலக்கு.  2025 ஆம் ஆண்டுக்குள் ஐந்து டிரில்லியன் பொருளாதாரமாக நாடு உருவாக வேண்டும்.

உலக பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா....வெளியுறவுதுறை அமைச்சர் பெருமிதம்!!!

சைப்ரஸ் நாட்டின் தலைநகர் நிகோசியாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தக நிகழ்வில் உரையாற்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகக் கூறியுள்ளார்.  மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் இந்தியாவை அந்நிய நேரடி முதலீட்டுக்கு முக்கிய இடமாக மாற்றுவதற்கு பங்களிப்பை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

ஜெய்சங்கர் மேலும் பேசுகையில், வரலாற்றிலேயே அதிக அந்நிய நேரடி முதலீட்டை இந்தியா பெறுகிறது எனவும் கடந்த ஆண்டு 81 பில்லியன் டாலர்கள் அந்நிய நேரடி முதலீட்டை இந்தியா பெற்றுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து பேசிய ஜெய்சங்கர் இந்திய வணிகம் மிகவும் விரிவடைந்துள்ளது எனவும் 2021-22 ஆம் ஆண்டில், முதன்முறையாக இந்தியாவின் ஏற்றுமதி 40000 கோடிகளை தாண்டியுள்ளது எனவும் இந்த ஆண்டு 47000 கோடியை இலக்காக நிர்ணயித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார். 

இந்தியாவை ஒரு முக்கிய உற்பத்தி மையமாக மாற்றுவதே இலக்கு என்று கூறியுள்ளார் வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கர்.  இதனுடன், 2025 ஆம் ஆண்டுக்குள் ஐந்து டிரில்லியன் பொருளாதாரமாக நாடு உருவாக வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  மதுரை மேயர் மாற்றமா?  டோஸ் விட்ட நேரு.... அப்செட் ஆன மேயர்!!