சூடானில் போர்.... ஆபரேசன் காவேரியை தொடங்கிய இந்தியா!!!

சூடானில் போர்.... ஆபரேசன் காவேரியை தொடங்கிய இந்தியா!!!

போர் நிறுத்த நடவடிக்கைகளையும் மீறி தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது.  இந்திய மக்களை வெளியேற்றும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

சூடானில் போர்:

சூடானில் அந்நாட்டின் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினிடையேதொடர் மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சூடானில் சிக்கியுள்ள இந்திய மக்களை பாதுகாப்பாக நாடு திருப்புவதற்கான பணியை இந்திய அரசு தொடங்கியுள்ளது.  போர் நிறுத்த நடவடிக்கையை தொடர்ந்து அனைத்து நாடுகளும் அந்நாட்டு மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் ஈடுப்பட்டுள்ளன.

ஆபரேசன் காவேரி:

இதுகுறித்து சூடானிற்கான இந்திய தூதர் அப்துல்லா ஒமர் பஷீர் அல் ஹுசைன் பேசுகையில், சூடானில் 3000 இந்தியர்கள் வசிப்பதாகவும் தற்போது வரை ஆபரேசன் காவேரி மூலமாக 300 முதல் 500 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.  விரைவாக அனைத்து இந்தியர்களும் பத்திரமாக சூடானிலிருந்து மீட்கப்படுவார்கள் எனவும் கூறினார்.

பாதிப்பு இல்லை:

இந்த மோதல் சூடானுடனான் இந்திய உறவை பாதிக்குமா என்ற கேள்விக்கு  இல்லை பாதிக்காது எனக் கூறிய அவர் பல நாடுகள் சூடானில் நடைபெறும் போரை நிறுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளதாகவும் விரைவில் போர் நிறுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  அந்த பாவச்செயலை பாஜக ஒருபோதும் செய்யாது....ராஜ்நாத் சிங்!!!