இன்று விண்வெளியில் பறக்கிறார் இந்திய வம்சாவளி பெண் ஸ்ரீஷா...

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீஷா, இன்று விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இன்று விண்வெளியில் பறக்கிறார் இந்திய வம்சாவளி பெண் ஸ்ரீஷா...
விர்ஜின் கேலடிக் என்ற அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனம், யூனிட்டி 22 என்ற விண்கலத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் பிரான்சன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு, இன்று விண்வெளிக்கு பயணம் மேற்கொள்கிறது.

இதில் விண்வெளி பயணம் மேற்கொள்ள உள்ள 2-வது இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை, ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ஸ்ரீஷா பாண்ட்லா பெற்றுள்ளார். மேலும், ராகேஷ் சர்மா, கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருக்குப் பிறகு, விண்வெளிக்கு பறக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த நான்காவது நபராக சிரிஷா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.