இருவேறு தடுப்பூசிகளை போட்டுக் கொள்வது ஆபத்து

இரு வேறு கொரோனா தடுப்பு மருந்துகளை மாறி மாறி உடலில் செலுத்திக்கொள்வது ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இருவேறு தடுப்பூசிகளை போட்டுக் கொள்வது ஆபத்து

இரு வேறு கொரோனா தடுப்பு மருந்துகளை மாறி மாறி உடலில் செலுத்திக்கொள்வது ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

ஆன்லைன் வாயிலாக கொரோனா தடுப்பூசி குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானியான சவுமியா சுவாமிநாதன், பலர் தடுப்பூசிகளின் செயல்பாடுகளை புரியாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட தடுப்பூசி நிறுவனத்தின் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளும் சிலர், அதையே அடுத்த டோஸாக செலுத்திக் கொள்ளவதில்லை என்றும், தடுப்பூசிக்கான கால இடைவெளியை மக்களே நிர்ணயித்து கொள்கின்றனர் என்றும், இது ஆபத்தான போக்கு எனவும் எச்சரித்துள்ளார்.

தரவுகள் இல்லாத, எவ்வித ஆதாரம் இல்லாத இடத்தில் வசிக்கும் இத்தகைய போக்கில் ஈடுபட்டால் மிகப்பெரிய விபரீதம் ஏற்படும் என அறிவுறுத்தியுள்ளார்.