ஹாங்காங் மக்கள் எதிர்க்கும் சட்டத்திற்கு, ஜாக்கி சான் ஆதரவு!

உலகப் புகழ்பெற்ற பிரபல நடிகரான ஜாக்கி சான், சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஹாங்காங் மக்கள் எதிர்க்கும் சட்டத்திற்கு, ஜாக்கி சான் ஆதரவு!

உலகப் புகழ்பெற்ற பிரபல நடிகரான ஜாக்கி சான், சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதிரடியான சண்டைக்காட்சிகள், சாகசங்கள் மற்றும் அவற்றுடன் சேர்ந்து நகைச்சுவை என உலக சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நடிகர் ஜாக்கி சானுக்கு தமிழ்நாட்டிலும் கூட ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 67 வயதான ஜாக்கி சான்,  சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் வசித்து வருகிறார். ஹாங்காங்கில் ஆதிக்கம் செலுத்துவதற்காக, அங்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீன அரசு நடைமுறைபடுத்தியதை எதிர்த்து, ஹாங்காங் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில், நடிகர் ஜாக்கி சான் சீனாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால், அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சீன திரைப்பட சங்கத்தின் துணைத் தலைவராக பதவி வகித்து வரும் ஜாக்கி சான், சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று நடந்த திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், கடந்த சில ஆண்டுகளில் சீனா மிக வேகமாக முன்னேறி வருவதாகவும், சீன குடிமகனாக இருப்பதில் பெருமை அடைவதாகவும் கூறியுள்ளார். மேலும், சீன கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை மிக குறைந்த காலத்திலேயே நிறைவேற்றி வருவதாகக் கூறிய ஜாக்கி சான், அக்கட்சியில் உறுப்பினராக இணைய ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார். ஜாக்கி சானின் இந்த பேச்சு ஹாங்காங் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.