ஜான்சன் அன்ட் ஜான்சன் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பக்கவாதம்?

ஜான்சன் அன்ட் ஜான்சன் தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் பக்கவாதம் ஏற்படலாம் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.

ஜான்சன் அன்ட் ஜான்சன் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பக்கவாதம்?

ஜான்சன் அன்ட் ஜான்சன் தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் பக்கவாதம் ஏற்படலாம் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.  இந்த தடுப்பூசி செலுத்திக்கொண்டோருக்கு ரத்த உறைவு ஏற்படுவதாக  ஏற்கனவே குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. தற்போது அவசர கால தேவைக்கு பயன்படுத்தப்பட்டு வரும் இந்த தடுப்பூசியானது நரம்பியல் பாதிப்பினை ஏற்படுத்து தெரியவந்துள்ளது.  

குறிப்பாக ஜான்சன் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட 1 கோடியே 28 லட்சம் பேரில் 100 பேருக்கு பக்கவாதம் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. ஆனால், மாடர்னா, பைசர் தடுப்பூசி செலுத்திக் கொண்டோருக்கு இந்த பாதிப்பில்லை எனவும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தடுப்பூசியை செலுத்தி கொண்ட பின்  பேசுவது, நடப்பது, கண் பார்வையில் பிரச்னை ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது