கெமர் புத்தாண்டும் மாட்டு வண்டிப் பந்தயமும்....!!

கெமர் புத்தாண்டும் மாட்டு வண்டிப் பந்தயமும்....!!

கம்போடியாவில் கெமர் புத்தாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, வருடாந்திர மாட்டு வண்டிப் பந்தயம் சிறப்பாக நடைபெற்றது. 

இளைய தலைமுறையினருக்கு பாரம்பரிய கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் விதமாக கெமர் புத்தாண்டு ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம்.  அதன்படி கொம்பொங் ஸ்பியூ மாகாணத்தில் நடைபெற்ற பாரம்பரிய மாட்டுவண்டி பந்தயத்தில் 39 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.  இதில் வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்ட நிலையில் போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

கெமெர் புத்தாண்டு  உண்மையில்  கம்போடிய மொழியில் "புத்தாண்டு ஆரம்பம்" எனும் பொருள்படும். இந்த நாளில் கம்போடியாவில் விடுமுறை வழங்கப்படுகிறது.  விடுமுறையானது புத்தாண்டு தினத்தன்று தொடங்கி மூன்று நாட்கள் நீடிக்கும்.  இது அறுவடை பருவத்தின் இறுதியில், மழைக்காலம் தொடங்கும் முன், விவசாயிகள் தங்கள் உழைப்பின் பலனை அனுபவிக்க கொண்டாடும் கொண்டாட்டமாகும்.  கெமர் புத்தாண்டானது தமிழ்நாட்டின் பொங்கல் விழாவைப் போன்று கொண்டாடப்படுகிறது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  சென்னை மாநகராட்சி வடிகால் பணிகள்... சிரமப்படும் மக்கள்!!