சீனாவின் கனமழைக்கு 50-க்கும் மேற்பட்டோர் பலி...

சீனாவின் ஆயிரம் ஆண்டுகால வரலாற்றில் காணாத கனமான மழையில் 50 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

சீனாவின் கனமழைக்கு 50-க்கும் மேற்பட்டோர் பலி...
சீனாவில் கடந்த  ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக அதிகபட்ச கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலர் பலியாகியுள்ளனர். இதில் ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சுரங்க பாதைகள் என சீனாவின் பெரும்பாலான பகுதி வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
 
மழை வெள்ளத்தை முன்னிட்டு ஹெனான் பகுதியில் வசிக்கும் 3 புள்ளி 76 லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனா். மொத்தம் 12 புள்ளி 4 லட்சம் பேர் மழை, வெள்ளத்திற்கு பாதிப்படைந்து உள்ளனர். இதேபோன்று, புத்த துறவிகள் சரணாலயங்களில் ஒன்றான சாவோலின் கோவிலும் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.