பெகாசஸ் செயல்பாட்டை செயலிழக்க செய்தது என்.எஸ்.ஓ.

சர்வதேச அளவில் பல்வேறு அரசுகளுக்கு விநியோகிக்கப்பட்ட பெகாசஸ் உளவு கருவியின் செயல்பாட்டை இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனம் தற்காலிகமாக செயலிழக்க செய்துள்ளது.

பெகாசஸ் செயல்பாட்டை செயலிழக்க செய்தது என்.எஸ்.ஓ.
பெகாசஸ் என்னும் உளவு கருவி மூலம் பிரான்ஸ் அதிபர் உள்பட 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு இஸ்ரேல் உள்ளிட்ட சர்வதேச நாடுகளை உலுக்கியுள்ளது. இதன் எதிரொலியாக இஸ்ரேலின் கண்காணிப்பு குழு அதிகாரிகள் என்.எஸ்.ஓ நிறுவன அலுவலகங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
 
இதையடுத்து சர்வதேச அளவில் பல்வேறு அரசுகளுக்கு விநியோகம் செய்த பெகாசஸ் உளவு கருவியின் செயல்பாட்டை என்.எஸ். ஓ நிறுவனம் தற்காலிகமாக செயலிழக்க செய்துள்ளது. பெகாசஸ் உளவு கருவி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக என்.எஸ்.ஓ விளக்கமளித்துள்ளது.