காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை பேரழிவு..! ஆங்காங்கே பிடிக்கும் காட்டுத்தீ!

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை பேரழிவு..! ஆங்காங்கே பிடிக்கும் காட்டுத்தீ!

காலநிலை மாற்றம் காரணமாக பல்வேறு நாடுகளில் அதிக வெப்பத்தால் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதால் மக்கள் சிரமம் அடைந்துள்ளனர். எந்தெந்த நாடுகள் என்பதை பார்க்கலாம்... 

கலிஃபோர்னியா மாகாணம்:

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம் யோஸ்மைட் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. தீயில் இருந்து  உலகின் மிகப் பழமையான ராட்சத சீக்வோயா மரங்களை பாதுகாக்க தேசிய பூங்கா சேவைப் பிரிவினர் போராடி வருகின்றனர். இதுவரை சுமார் இரண்டாயிரத்து 44 ஏக்கர் பரப்பளவு வனப்பகுதி காட்டுத் தீயால் அழிந்துள்ளது.  

மேற்கு ஸ்பெயின்:

மேற்கு ஸ்பெயினில் உள்ள லாட்ரில்லரில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.  கடுமையான வெப்ப அலை தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. 

போர்ச்சுகல்:

போர்ச்சுகலின் மத்தியப் பகுதியில் பல இடங்களில் காட்டுத் தீ பரவி எரிந்து வருகிறது. இதனால் வனப்பகுதியை ஒட்டி வாழும் நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். 

பிரான்ஸின் ஆர்க்காச்சன் வளைகுடாப் பகுதி:

பிரான்சின் ஆர்க்காச்சன் வளைகுடாப் பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயால் அந்த பகுதியே புகை மண்டலமாக காணப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.