நியூயார்க் நகர தெருவுக்கு "விநாயகர்" பெயர் அறிவிப்பு...!

நியூயார்க் நகர தெருவுக்கு "விநாயகர்" பெயர் அறிவிப்பு...!

அமெரிக்காவில் நியூயார்க் நகர தெருவுக்கு விநாயகர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மகா வல்லப கணபதி தேவஸ்தான கோவில் உள்ளது.

இந்த விநாயகர் கோவில் வட அமெரிக்காவின் முதலாவது மற்றும் பழமையான இந்து கோவில் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த கோவில் அமைந்திருக்கும் தெருவுக்கு போவின் தெரு என பெயரிடப்பட்டு இருந்தது.  

தற்போது இந்த தெருவின் அடையாளமாக இந்த விநாயகர் கோவில் விளங்கி வருகிறது. எனவே இந்த தெருவுக்கு விநாயகர் கோவில் தெரு என இணை பெயர் சூட்டப்பட்டு உள்ளது.