2022 ம் ஆண்டில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்னிக்கை ..? உலக சுகாதார அமைப்பு தகவல்..!

2022 ம் ஆண்டில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்னிக்கை ..? உலக சுகாதார அமைப்பு தகவல்..!

2022 ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை கொரோனாவால் ஒரு மில்லியன் மக்கள் உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி பெரும் இழப்புகளை ஏற்படுத்தியது. தற்போது வரை கொரோனா பரவல் முடிவடையாமல் தொடர்ந்து கொண்டே தான் வருகிறது.

இதனை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள், பூஸ்ட்டர் தடுப்பூசிகள் ஆகியவை மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. 2019 ம் ஆண்டில் பிற்பகுதியில், இந்த வைரஸ் முதலில் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, கிட்டத்தட்ட 6.45 மில்லியன் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக WHO தெரிவித்துள்ளது. சமீபத்தில் நடந்த செய்த்ஜிஹியாளர் சந்திப்பில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், இந்த ஆண்டில் இதுவரை ஒரு மில்லியன் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன எண்டு கூறியும், உலகம் உண்மையில் தொற்றுநோயிடம் இருக்கிறதா எனவும் கேள்வி எழுப்பினார். மேலும், கடந்த 7 நாட்களில் மட்டும் 5.3 மில்லியன் கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.