அடுத்த தலைமுறைக்கு பென்குயின்களை போட்டோவில் தான் காட்ட வேண்டும்...

2100ஆம் ஆண்டில் பென்குயின்கள் அழிந்து போகும் என ஒரு ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது பெரும் கவலையை கொடுத்துள்ளது.

அடுத்த தலைமுறைக்கு பென்குயின்களை போட்டோவில் தான் காட்ட வேண்டும்...

பென்குவின்கள் யாருக்குத் தான் பிடிக்காது. அதுவும் கார்ட்டூன் மற்றும் அனிமேட்டட் படங்களில் காட்டப்படும் பென்குவின்களை ரசித்து குழந்தைகள் கீசெயின், பொம்மைகள் என அனைத்தும் வாங்கிக் கொஞ்சி வருவது நாம் அனைவரும் அறிந்ததே.

ஆனால், அந்த பென்குவின்கள் தற்போது அழியப்போகின்றன என சொன்னால் அதை நம்ப முடிகிறதா? ஆம்... அது உண்மை தான். அழகாக தத்தி தத்தி நடக்கும் பென்குவின்கள், நமது பூமியை விட்டு முழுமையாக அழிந்து போகும் என ஆய்வுகள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க | நாளை 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

அண்டார்டிகாவில் உள்ள 97 சதவிகித நிலம் சார்ந்த உரியினங்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 100 ஆம் ஆண்டில் வெகுவாக குறைந்துவிடும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்ட குயீன்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், உலக பருவநிலை மாற்றத்தினால் அண்டார்டிகாவில் உள்ள பனி தொடர்ந்து உருகி வருவதாகவும், இதனால், அண்டார்டிகாவில் உள்ள பனி நிலப்பரப்பு குறைந்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

இதன் காரணமாக அனல் காற்று போன்றவை அண்டார்டிகாவில் வீச ஆரம்பித்துள்ளது. இதே நிலை நீடித்தால் 2 ஆயிரத்து 100 ஆம் ஆண்டில் 97 சதவிகித உயிரினங்களின் வெகுவாக குறைந்து விடும். குறிப்பாக எம்பெரர் பென்குயின்கள் முற்றிலும் அழிந்து போகும் அபாயம்  உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | உருமாறிய கொரோனா வைரஸ் எதிரொலி..! சர்வதேச விமான பயணிகளுக்கு பரிசோதனை...!