பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் விபத்து எதிரொலி... பயன்பாட்டை நிறுத்திய பிலிப்பைன்ஸ் அரசு...

பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் பயன்பாட்டில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது பிலிப்பைன்ஸ் அரசு.

பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் விபத்து எதிரொலி... பயன்பாட்டை நிறுத்திய பிலிப்பைன்ஸ் அரசு...
பிலிப்பைன்ஸில் 2வது உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட ராணுவ தளவாடங்கள் பழமையாகி வருவதை தொடர்ந்து, அதற்கென நிதி ஒதுக்கி பிலிப்பைன்ஸ் அரசு புதிய தளவாடங்களை கொள்முதல் செய்து வருகிறது. 
 
அண்மையில் போலந்திடம் இருந்து 11 பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்களை பிலிப்பைன்ஸ் கொள்முதல் செய்திருந்த நிலையில், அதில் ஒன்று நேற்றைய பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது. 
 
இதில் 6 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, தொழில்நுட்ப கோளாறு உள்ளதா என்பதை ஆய்வு செய்ய பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் அனைத்தும் பயன்பாட்டிலிருந்து தற்காலிகமாக பிலிப்பைன்ஸ் அரசு நீக்கியுள்ளது.