சீன அதிபர் ஜின்பிங்குக்கு பினராயி விஜயன் வாழ்த்து...

சீன அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி ஜின்பிங்குக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சீன அதிபர் ஜின்பிங்குக்கு பினராயி விஜயன் வாழ்த்து...

சீனாவின் அதிபராக 3-வது முறையாக ஜி ஜின்பிங் போட்டியின்றி  தேர்வு செய்யப்பட்டார். 2 ஆயிரத்து 952 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில், சீன அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜின்பிங்குக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

அதில், சீன மக்கள் குடியரசின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் ஜி ஜின்பிங்குக்கு புரட்சிகர வாழ்த்துகள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

சீன வரலாற்றில் மூன்றாவதாக ஒரே பிரதமர் அடுத்தடுத்த முறை தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதன்முறை என்பதால் ஜி ஜின்பிங் அனைவராலும் வரவேற்கப்படுகிறார். தனது முதல் உரையில் தைவான் சார்பு சுதந்திர சக்திகளை சீனா எதிர்க்க வேண்டும் என தெரிவித்தது சீனர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | பாலின சமத்துவத்தை அடைய இன்னும் 300 ஆண்டுகள்....!!!