அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி சந்திப்பு...

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்து இரு நாட்டின் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து  முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்  

அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி சந்திப்பு...

குவாட் கூட்டமைப்பு நாடுகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும், ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார்.

முதல் நாளன்று பல்வேறு சர்வதேச நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்த அவர், இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து இன்று அந்நாட்டு துணை அதிபர் கமலா ஹாரிசுடன் ஆலோசனை நடத்தினார்.  

இந்த நிலையில்  வெள்ளை மாளிகை சென்ற பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். வெள்ளை மாளிகைக்கு வந்த பிரதமர் மோடிக்கு  இந்தியா வம்சா வழியினர் பரதநாட்டியமாடி உற்சாகமாக வரவேற்றனர் 

பைடனுடான சந்திப்பில் இரு தரப்பு உறவு மேம்பாடு, ஆப்கான் விவகாரம் மற்றும் இந்தோ பசிபிக் பெருங்கடலில் சீன ஆதிக்கம் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.