புதினின் ரகசிய காதலி அலினா கபேவா?.. தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்த்தது ஐரோப்பிய ஒன்றியம்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் ரகசிய காதலி என கூறப்படும் அலினா கபேவா-வை ஐரோப்பிய கூட்டமைப்பு தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்த்துள்ளது.

புதினின் ரகசிய காதலி அலினா கபேவா?.. தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்த்தது ஐரோப்பிய ஒன்றியம்!

அலினா கபேவா 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் ரித்மிக் ஜிம்னாஸ்டிக்ஸிற்கான ஆல்ரவுண்ட் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர். 38 வயதான கபீவா முன்னாள் கால்பந்து வீரர் மராட் கபாயேவின் மகள்.கபேவாவும் புதினும் பல சந்தர்ப்பங்களில் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இவர் புதினின் ரகசிய காதலி என்று கூறப்படுகிறது. உக்ரைன் மீதான் ரஷ்யாவின் போர் தாக்குதல்களுக்கு எதிப்பு தெரிவிக்கும் வகையில் புதினின் ரகசிய காதலி என கூறப்படும், முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவாவை சிறை பிடிக்க  ரஷ்யாவை எதிர்க்கும் மேற்கத்திய நாடுகள் திட்டம் தீட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அலினா கபேவா-வை ஐரோப்பிய கூட்டமைப்பு தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்த்துள்ளது.