உலகம் முழுவதும் ரமலான் சிறப்பு கொண்டாட்டம்...!

உலகம் முழுவதும் ரமலான் சிறப்பு கொண்டாட்டம்...!

ஒரு மாத காலம் புனித நோன்பு இருந்து தியாகம், அறம் போன்ற உயரிய நெறிகளைக் கடைப்பிடித்த இஸ்லாமிய மக்கள், உலகம் முழுவதும் இன்று உற்சாகத்துடன் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

காங்கோ ஜனநாயகக் குடியரசில் புனித ரமலான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், ஈகை எனப்படும் பதில் உதவி எதிர்பாராது கொடுத்தல் என்பதற்கு ஏற்ப, இடம்பெயர்ந்து முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு இஸ்லாமியர்கள் பொருளுதவிகள் வழங்கினர். 

இதையும் படிக்க : அதிமுகவிற்கு தொடர்பில்லாத ஓ.பி.எஸ்...அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தக்கூடாது!

இதேப்போன்று இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் திரளான இஸ்லாமியர்கள் சிறப்பு கூட்டு தொழுகையில் ஈடுபட்டனர்.  தொற்றுநோய்க்குப் பிறகு தங்கள் அன்புக்குரியவர்களுடன் சுதந்திரமாக ரம்ஜானை கொண்டாட முடிந்ததால் நிம்மதியதாக இருப்பதாக பலர் தெரிவித்துள்ளனர்.

இதேப்போல் பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி நகரில், ரமலான் பண்டிகையை ஒட்டி திரளான இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.