தேனீக்கள் கொட்டி உயிரிழந்த அரிய வகை பென்குயின்கள்....

தென் ஆப்ரிக்காவில், தேனீக்கள் கொட்டியதில், அரிய வகை பென்குயின்கள் உயிரிழந்துள்ளன.

தேனீக்கள் கொட்டி உயிரிழந்த அரிய வகை பென்குயின்கள்....

கேப் டவுன் கடற்கரை பகுதியில் அண்மையில் 63 அரிய வகை பென்குயின்கள் சடலமாக கிடந்துள்ளன. பின்னர் இறந்த பென்குயின்கள் சடலம் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. அதில் பென்குயினின் கண் பகுதியில் தேனீக்கள் கொட்டியிருந்தது கண்டறியப்பட்டது. மேலும் எந்தவொரு பறவையிலும் வெளிப்புற உடல் காயங்கள் காணப்படவில்லை.

மேலும் பென்குயின்களின் உடலுக்கு அருகே தேனீக்கள் சில இறந்து கிடந்ததாவும் கூறப்படுகிறது. தேனீக்கள் கொட்டி பென்குயின்கள் உயிரிழந்திருப்பது அரிய நிகழ்வு என தெரிவிக்கும் மருத்துவர்கள், தேசிய  சரணாலயத்தில் பராமரிக்கப்பட்ட இந்த பென்குயின்கள் உயிரிழப்புக்கான உரிய காரணம் இது தானா என ஆராய்ந்து வருகின்றனர்.