இலங்கைக்கு பயணத்தை தொடங்கியது சீன உளவு கப்பல்!!

இலங்கைக்கு பயணத்தை தொடங்கியது சீன உளவு கப்பல்!!

இலங்கையின் வேண்டுகோளை மீறி ஹம்பந்தோட்டா துறைமுகத்தை நோக்கி சீன கப்பல் வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹம்பந்தோட்டா துறைமுகம்

இலங்கையின் தென்பகுதியில் உள்ள ஹம்பன்தொட்டா ஆழ்கடல் துறைமுகத்துக்கு சீனாவின் 'யுவான் வாங்-5' என்ற போர்க்கப்பல் வர இருப்பதாக சீனா அறிவித்தது. ஆகஸ்ட் 11-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை ஹம்பன்தொட்டா துறைமுகத்தில் நிறுத்தப்படும் இந்த கப்பல் செயற்கைக்கோள் தகவல்களை சேகரிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இலங்கை வேண்டுகோள்

ஆனால், அது உளவு கப்பல் என்பதால் பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தல் உள்ளதாக இந்திய எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, பயணத்தை ஒத்திவைக்கும்படி சீனாவுக்கு இலங்கை வேண்டுகோள் விடுத்தது.

ஹம்பந்தோட்டா துறைமுகத்தை நோக்கி வரும் சீன கப்பல்

இந்நிலையில் இலங்கையின் வேண்டுகோளை மீறி, சீன கப்பல் ஹம்பந்தோட்டா துறைமுகத்தை நோக்கி தனது பயணத்தை தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 23 ஆயிரம் டன் எடை கொண்ட 'யுவான் வாங்-5' கப்பல், 400 பேர் கொண்ட குழுவுடன் இந்தோனேசியா கடற்கரையில் இருந்து பயணத்தை தொடங்கியுள்ளதாகவும், வரும் வியாழக்கிழமை ஹம்பந்தோட்டா துறைமுகத்தை வந்தடையும் என்றும் கூறப்படுகிறது.