அத்தியாவசிய  பொருட்களில் விலை கடும் உயர்வு: தலிபான்களால் அன்றாட வாழ்க்கையை நடத்த அவதிப்படும் ஆப்கான் மக்கள்...

ஆப்கானிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் வங்கியில் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுக்க முடியாமல் அன்றாட வாழ்கையை நடத்த முடியாமல் திணறி வருகின்றனர்.  

அத்தியாவசிய  பொருட்களில் விலை கடும் உயர்வு: தலிபான்களால் அன்றாட வாழ்க்கையை நடத்த அவதிப்படும் ஆப்கான் மக்கள்...

ஆப்கானில் அமெரிக்க படைகள் திரும்பபெறபட்ட நிலையில், அங்கு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். இதனால் பயத்தில் ஆப்கான் மக்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் அந்நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து உள்ளது.

 ஆப்கான் பொருளாதாரமே ரொக்கத்தில் நடைபெற்று வருவதால் மொத்தம் 10-15% மக்களுக்குத்தான் வங்கிக் கணக்குகள் உள்ளன. முந்தைய ஆப்கான் அரசின் சொத்துக்கள் வெளிநாட்டில்தான் வைக்கப்பட்டிருந்தன. இதனால் ஆப்கான் பண மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக  உயர்ந்துள்ளது.

தலிபான்கள் ஆட்சி நடப்பதால் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஆப்கானுக்கு உதவி புரிவது இனி கடினமே. ஏறக்குறைய உதவி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வில் உள்ள 7 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தங்கம் மற்றும் ரொக்க இருப்பை எடுக்க  அமெரிக்கா தடை செய்துள்ளது, அதே போல் உலக வங்கியும் தாங்கள் ஒதுக்கிய 460 மில்லியன் டாலர்கள் தொகையையும் பிடித்து வைத்துள்ளது.

இதனால் தலிபான்கள் திணறி வருகின்றனர். பொதுமக்கள் வங்கியில் சேமித்து வைத்துள்ள பணத்தை எடுக்க முடியாமல், வெறும் கையோடு வீடுகளுக்கு திரும்பி வருவதால், கடுமையான உணவு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.இதனால்  பல இடங்களில் மோதல்கள் உருவாகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உலக நாடுகளின் நம்பிக்கையை தாலிபான்கள் பெற்றால்தான் அவர்களால் ஆப்கானிஸ்தானை நிதி நெருக்கடி இல்லாமல் நடத்த முடியும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.