பொருளாதார நெருக்கடியால் பல்வேறு நாடுகள் வீழ்ச்சியை சந்திக்கும் அபாயம் - உலக வங்கி எச்சரிக்கை!

பொருளாதார நெருக்கடியால் இலங்கையை தொடர்ந்து பல்வேறு நாடுகள் வீழ்ச்சியை சந்திக்கும் அபாயம் உள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியால் பல்வேறு நாடுகள் வீழ்ச்சியை சந்திக்கும் அபாயம் - உலக வங்கி எச்சரிக்கை!

கொரோனா, அதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு, அதிகரித்த கடன் ஆகியவற்றால் ஏற்கனவே திணறிக் கொண்டிருந்த வளரும் மற்றும் வறுமை நாடுகள் அனைத்தும் தற்போது உக்ரைன்-ரஷ்யா போரால் அழிவைச் சந்திக்கும் நிலைக்கு வந்துள்ளன.

உணவு மற்றும் எரிபொருள், உரம்  விலை உயர்வு, வட்டி விகித உயர்வு ஆகியவை பல்வேறு நாடுகளையும் பெரும் பொருளாதார நெருக்கடியில் தள்ளியுள்ளன.

இதில் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் பசிபிக் மண்டலத்தில்  தலா 25 நாடுகளும் லத்தீன் அமெரிக்கா மண்டலத்தில் 19- நாடுகளும் கடும் பாதிப்பைச் சந்தித்து வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

துருக்கி, பாகிஸ்தான், கென்யா, எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளுக்கு நிதியுதவி மற்றும் புதிய கடனுதவி தொடர்பாக பேசி வருவதாகவும் கூறியுள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடியால்  வீழ்ந்த முதல் நாடாக இலங்கை இருந்தாலும் அடுத்தடுத்து பல்வேறு நாடுகள் இந்த நிலையை எதிர்கொள்ளும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ளது.