அமெரிக்க இணையதளங்களை முடக்கிய ரஷ்யா!!

அமெரிக்க இணையதளங்களை முடக்கிய ரஷ்யா!!

அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் இணையதளங்கள் முடக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அட்லாண்டா, லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட 14 விமான நிலையங்களின் நேற்று திடீரென முடங்கின. இதனால் விமான நிலையங்களில் பதற்றமான சூழல் நிலவியது. ஆனால், விமானங்கள் புறப்படுதல், தரையிறங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், விமான நிலைய இணைதளங்கள் மீதான தாக்குதலுக்கு ரஷ்ய மொழி பேசும் பயங்கரவாதிகள் குழு பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து இணையதளங்களை மீட்கும் முயற்சியில் விமானநிலைய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க:   கீவ் நகரம் மீது மீண்டும் தாக்குதல் நடத்திய ரஷ்யா!!!