தீவிரம் அடைந்து வரும் ரஷ்யா- உக்ரைன் போர்.. 26 லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சம்!!

உக்ரைனில் போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில், அங்கிருந்து 26 லட்சம் பேர் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தீவிரம் அடைந்து வரும் ரஷ்யா- உக்ரைன் போர்..  26 லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சம்!!

உக்ரைன் மீதான போரை ரஷ்யா நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகிறது.  உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீதும் ரஷ்ய படை தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழியாக தாக்குதல் நடத்தும் அதேவேளையில், தரை வழியாகவும் ரஷ்ய படைகள் உக்ரைன் நகரங்களுக்குள் முன்னேறி வருகின்றன.

முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது. தலைநகர் கீவ் மற்றும் அதை சுற்றியுள்ள வடக்கு நகரங்களில் உக்ரைன் வீரர்கள் பதிலடி கொடுத்து வருவதால் அங்கு முன்னோக்கி செல்வதில் ரஷ்ய படைகளுக்கு சவாலாக உள்ளது.

இந்தநிலையில், ரஷ்யா நடத்தி வரும் தீவிர தாக்குதலில், துறைமுக நகரமான மரியுபோல் பேரழிவை எதிர்கொண்டு வருகிறது. அந்த நகரின் மீது ஏவுகணைகளும், பீரங்கி குண்டுகளும் வீசப்பட்டதில் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன. போர் முடிவுக்கு வராமல் தொடர்ந்து வருவதால், உக்ரைன் மக்கள் அங்கிருந்து அண்டை நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். 26 லட்சத்துகும் மேற்பட்டோர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது. போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாகியா ஆகிய நாடுகளில் அதிகளவில் தஞ்சம் புகுந்துள்ளனர். போர் தொடரும் பட்சத்தில் அகதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.