பல ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை துறைமுகத்தில் சொகுசுக் கப்பல்...

900 மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் கொழும்புத் துறைமுகம் சொகுசு கப்பல் வந்துள்ளது. பாரமரிய முறைபடி கொழும்பு சுற்றுலா பயணிகளை வரவேற்றது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை துறைமுகத்தில் சொகுசுக் கப்பல்...

கொரோனா தொற்றுக்குப் பின்னர், முதலாவது சொகுசு பயணிகள் கப்பல் நேற்று இலங்கைக்கு வந்துள்ளது. குளிர்கால சுற்றுலாப் பருவத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கும் வகையில் இந்த கப்பல் இலங்கை வந்துள்ளது. 

'வைக்கிங் மார்ஸ்' என்ற சொகுசு பயணிகள் கப்பல், நேற்று 900 சுற்றுலா பயணிகளுடன் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்ததாகச் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. நோர்வே நாட்டுக் கொடியின் கீழ்வந்த இந்தக் கப்பல் கடந்த 16ஆம் தேதி, இலங்கை வருவதற்காக இந்தியாவின் கோவாவிலிருந்து  புறப்பட்டிருந்தது.

மேலும் படிக்க | இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது!

இலங்கை கடற்கரை சுற்றுலாப் பொதிகளின் கீழ், இந்தச் சுற்றுலாப் பயணிகள் கண்டி, பின்னவெல, காலியில் நகரச் சுற்றுப்பயணங்கள், கொழும்பில் நடைப் பயணம், முத்துராஜவெல மற்றும் ஆற்று படகுச் சுற்றுலா சவாரிகளை போன்றவற்றை மேற்கொள்ள உள்ளனர்.

இந்த சுற்றுலா பயணிகளை வரவேற்கும் நிகழ்வில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்திருந்தார். பொருளாதார நெருக்டியை இலங்கை எதிர்கொண்டுள்ள இந்த நிலையில் இதுபோன்று அதிக சுற்றுலா பயணிகள் வருவது சிறப்பானதாகும் என அவர் தெரிவித்தார்.

 மேலும் படிக்க | இனி செல்லபிராணிகளுடனே விமானத்தில் பயணிக்கலாம்...