தலித் பெண் சமைத்த உணவை சாப்பிட மறுத்த பள்ளி மாணவர்கள்....

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளியில் சமையலராக பணியாற்றும் தலித் பெண்மணி ஒருவர் சமைத்த உணவினை அப்பள்ளி மாணவர்கள் சாப்பிட மறுத்து வருகின்றனர்.

தலித் பெண் சமைத்த உணவை சாப்பிட மறுத்த பள்ளி மாணவர்கள்....

சம்பவாத் என்ற மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வரும் நிலையில் அங்கு சமையலராக தலித் பெண்மணியான சுனிதா தேவி என்பவர் சமைத்து வந்துள்ளார்.இதனை தொடர்ந்து அந்த அரசு பள்ளியில் ஆதிக்க சாதி குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் படித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து உயர்ந்த இடத்தில் இருக்கும் அந்த பள்ளியை சேர்ந்த குழந்தைகள் அனைவரும் தலித் பெண்மணி சமைக்கும் மதிய வேளை உணவினை சாப்பிட மறுத்து வந்துள்ளனர்.

பள்ளி குழந்தைகள் தொடர்ந்து உணவினை சாப்பிட மறுத்து வந்த நிலையில் இந்த விவகாரம் மெல்ல வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது.இதில் உணவு சமைத்த பெண்மணியான் சுனிதா தேவியை பணியிடை நீக்கம் செய்து அந்த இடத்திற்கு மாற்று ஒருவரை பணியில் அமர்த்தியுள்ளனர்.

இது குறித்து உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கையில் தற்போது இந்த விவகாரம் முடிவடைந்துள்ளது,அதே வேளையில் இந்த விவகாரம் சிக்கலாக மாறும் அளவிற்கு மாறக்கூடவும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.