கீழே விழுந்து நொறுங்கி ராணுவ விமானம்... 17 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு...

ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி  17 பேர் உயிரிழப்பு

கீழே விழுந்து நொறுங்கி ராணுவ விமானம்... 17 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு...
பிலிப்பைன்ஸில், ராணுவ வீரர்களுடன் சென்ற விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 17 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்லாமியர்கள் நிறைந்த பிராந்தியங்களில் பயங்கரவாத செயலை ஒடுக்கும் விதமாக, புதிதாக பயிற்சி பெற்ற ராணுவ வீரர்களை அங்குள்ள சுலு மாகாணத்துக்கு அனுப்பி வைக்கும் ஏற்பாடுகள் நடந்து வந்தன.
 
இந்த நிலையில் இன்று ராணுவ வீரர்களுடன் தெற்கு சுஜோலோ தீவு நோக்கி புறப்பட்ட விமானம் தரையிறங்கியபோது, கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி தீப்பற்றியது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர்  விமானத்தில் இருந்த 3 விமானிகள் மற்றும் இரு குழுக்கள் உட்பட மொத்தம் 92 பேரை தேடும் பணியை முடுக்கிவிட்டனர்.
இதில் 40 பேர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், 17 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ள 35 பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாக பாதுகாப்பு துறை அமைச்சர் டெல்பின் லாரென்சானா தெரிவித்துள்ளார்.