ஒரு பக்கம் உலக சாதனை.. மறுபக்கம் தாயுடன் தனது புத்தக வெளியீடு...

ஷார்ஜாவில் நடைபெற்ற அமீரக சார்ஜா புத்தகக் கண்காட்சியில் ஒரே மேடையில் தாய் மற்றும் 6 வயது மகள் எழுதிய புத்தகங்கள் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வு உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஒரு பக்கம் உலக சாதனை.. மறுபக்கம் தாயுடன் தனது புத்தக வெளியீடு...

ஷார்ஜாவில் 41-வது புத்தகக் கண்காட்சி கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. இதில், ஈரோட்டில் பிறந்து, துபாயில் வசித்துவரும், தமிழ் எழுத்தாளர் முனைவர் ஸ்ரீ ரோகிணி எழுதிய "ஈர்ப்பு விதி 2" என்ற  புத்தகம் வெளியிடப்பட்டது. இப்புத்தகத்தை புக்டோப்டியா நிறுவனர் திருமதி மலர்விழி வெளியிட்டார். 

மேலும் படிக்க | பிரதமருக்கு முதலமைச்சர் வழங்கிய டைமிங் கிப்ட்..!

இதே மேடையில்,  ஸ்ரீ ரோகிணியின் 6 வயது மகள், ரிதனி காதம்பரி எழுதிய கவிதை சிந்தும் இடக்கை  என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இப்புத்தகத்தை அவரது பாட்டி ரேவதி பெருமிதத்துடன் வெளியிட்டார். இப்புத்தகத்தை பிரபல குழந்தைகள் மருத்துவர் ராஜேஷ் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

இந்தப் புத்தகம் தனது சொந்த ஓவியங்களுடன் தனது சொந்த கையெழுத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். மேலும், பாடல் இயற்றியும், மலையாளம் மற்றும் அரபிக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | "பெரியார் தாத்தா" குழந்தைகள் கையில் தவழும் பெரியார்...!

"இருமொழி புத்தகத்தை வெளியிட்ட உலகின் மிக இளம் வயது எழுத்தாளர் " என்ற பட்டத்தை அமீரக உலகச் சாதனைப் புத்தகத்தின் தலைவர் டாக்டர் ஜித்தேந்தரா, குழந்தை எழுத்தாளர் ரிதனி காதம்பரிக்கு உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.  

இதில் தமிழகத்தை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு, எழுத்தாளருக்கும், இளம் எழுத்தாளருக்கும், பாராட்டு தெரிவித்தனர். 

மேலும் படிக்க | “முத்துவும் முப்பது திருடர்களும்”- காவல்துறையின் புதிய விழிப்புணர்வு முயற்சி...