ஷெல் நிறுவனத்தால் ரஷ்ய எரிவாயுவை வாங்க முடியாத நிலை.. லண்டனின் ரஷ்ய எதிர்ப்பு கொள்கையின் பக்கவிளைவு என விமர்சனம்!!

ஷெல் நிறுவனம் ரஷ்ய எரிவாயுவை வாங்க இயலாமல் போனது, இங்கிலாந்தின் ரஷ்ய எதிர்ப்பு கொள்கையின் பக்க விளைவுதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷெல் நிறுவனத்தால் ரஷ்ய எரிவாயுவை வாங்க முடியாத நிலை.. லண்டனின் ரஷ்ய எதிர்ப்பு கொள்கையின் பக்கவிளைவு என விமர்சனம்!!

ரஷ்ய எரிவாயு ரூபிளில்தான் விநியோகம் என்ற புதிய விதிமுறையை ரஷ்யா நேற்று முதல் அமலுக்குக் கொண்டு வந்துள்ளது.

இதற்காக ரஷ்ய வங்கிகளில் ரூபிளில் கணக்குத் தொடங்கி அதன் மூலம் மட்டுமே எரிவாயு விநியோகம் என்றும் அறிவித்து விட்டது. இதனால் ஐரோப்பிய நாடுகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன.

இந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்,  ரஷ்ய எதிர்ப்பு அனைத்திற்கும் தலைவராக இருக்க லண்டன் விரும்புவதாகவும், இந்த விஷயத்தில் வாஷிங்டனை விட முன்னணியில் இருக்க ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் அது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். ரஷ்யாவின் காஸ்ப்ரோம் வங்கி மீது இங்கிலாந்து பொருளாதாரத் தடை விதித்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர்  இப்போது ரூபிள்களில் கூட எரிவாயு வாங்க வழியில்லா நிலையில் இங்கிலாந்து உள்ளதாகத் தெரிவித்தார்.