தென்னாப்பிரிக்கா வன்முறையில் இந்தியர்களின் கடைகள் சூறை

தென்னாப்பிரிக்கா வன்முறையில் இந்தியர்களின் கடைகள் சூறையாக்கப்பட்டுள்ளன.

தென்னாப்பிரிக்கா வன்முறையில் இந்தியர்களின் கடைகள் சூறை

தென்னாப்பிரிக்காவில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமாவின் ஆதரவாளர்கள் செய்து வரும் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 225 ஆக உயர்ந்துள்ளது. தென்னாப்பிரி்க்காவில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமாவுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 15 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, அவருடைய ஆதரவாளர்கள் நடத்தி வரும் போராட்டங்களில் வன்முறை வெடித்துள்ளது. ‌ வன்முறையை வன்முறையை ஒடுக்க, 25 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 1 வாரமாக நடந்து வரும் இந்த வன்முறையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 225 ஆக உயர்ந்தது. டர்பன், கேப் டவுன், ஜுமாவின் சொந்த மாகாணமான கவாசுலு நாடல் பகுதிகளில் வன்முறை கட்டுங்கடாமல் போய் கொண்டிருக்கிறது. இந்த வன்முறைகள் திட்டமிட்டு தூண்டப்படுவதாக இந்நாட்டு அதிபர் சிரில் ராம்போசா குற்றம்சாட்டி இருக்கிறார். இந்த வன்முறையில் தென்னாப்பிரிக்காவில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்களின் அலுவலகங்கள், கடைகள் சேதப்படுத்தப்பட்டு, பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன. இதனால், இந்தியர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.