ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு குறித்து ஆய்வில் வெளியான முக்கிய தகவல்!!

ஒமைக்ரான் வைரஸ் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தாது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு குறித்து ஆய்வில் வெளியான முக்கிய தகவல்!!

கடந்த ஆண்டு நவம்பரில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், மற்ற உருமாறிய கொரோனா வைரஸ்களை விட வேகமாக பரவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ஒமைக்ரான் வைரசால் பல நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில், மற்ற உருமாறிய கொரோனா வைரஸ்களை விட ஒமைக்ரான் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு குறைவு என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக லண்டன் கிங்ஸ் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில்,

இங்கிலாந்தில் டெல்டா வைரசுடன் ஒப்பிடும்போது ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தொற்றுக்கு பிறகு நீண்ட கால கொரோனா பாதிப்பு உருவாவதற்கான வாய்ப்பு, 20 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைவாக இருப்பதாகவும், இது நோயாளியின் வயது மற்றும் கடைசி தடுப்பூசி செலுத்திய நேரத்தை பொறுத்து மாறுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.