பெண் கல்வியைத் தடை செய்யும் தாலிபான்கள் - போராட்டத்தில் குதித்த மாணவிகள், ஆசிரியர்கள்

பெண் கல்வியைத் தடை செய்யும் தாலிபான்கள் - போராட்டத்தில் குதித்த மாணவிகள், ஆசிரியர்கள்

ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்கு எதிரான தாலிபான்களின் போக்கை கண்டித்து மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆப்கனில் தலிபான்கள் ஆட்சியை பிடித்தவுடன் பெண் கல்வி நிலை குறித்து பெரும்பாலான நாடுகள் சந்தேகம் எழுப்பின. ஆனால், தாங்கள் முன்பு போல் இல்லை என்றும் சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தை பெறும் வகையில் நடந்து கொள்வோம் என்றும் தாலிபான்கள் தெரிவித்தனர்.

ஆனால் கடந்த 23-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் மூடப்பட்டன. காரணம் கூற தாலிபான்கள் மறுத்து விட்டனர். இந்தநிலையில் காபூலில் உள்ள கல்வி அமைச்சம் முன் மாணவிகள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண் கல்விக்கான உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ள நிலையில் அதனை தாலிபான்கள் பறிக்க உரிமை இல்லை என்று அவர்கள் முழக்கமிட்டனர்.