வன்முறையை கைவிட்டால் தாலிபான்களுடன் ஆட்சியை பகிர தயார்! அதிரடி அறிவிப்பால் உலக நாடுகள் அதிர்ச்சி!!  

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வன்முறையைக் கைவிட்டால் ஆட்சியில் பங்களிக்க தயார் என அந்நாட்டு அரசு அறிவித்திருப்பது  உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறிய நிலையில், 20 ஆண்டுகளாக தலைமறைவாக செயல்பட்டு வந்த பல்வேறு மாகணங்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றைக் கைப்பற்றி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஏற்கனவே 9 மாகணத் தலைநகரங்களை கைப்பற்றியுள்ள நிலையில், அரசுப்படைகள் தொடர்ந்து பலவீனம் அடைந்து வருகின்றன. இந்நிலையில் ஆட்சியில் பங்கு தருவதாக அந்நாட்டு அரசுத் தரப்பு அறிவித்துள்ளது.

கத்தாரில் நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தையின் போது, அரசுப் பிரதிநிதிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். இதன்மூலம் ஆப்கானிஸ்தானில்  ராணுவத்திற்கும்  தாலிபான்களுக்கும் இடையேயான சண்டை  விரைவில் முடிவுக்கு வரும் என  அரசு தரப்பினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்