விரைவில் புதிய அரசை அமைக்க இருக்கும் தலிபான்?

தலிபான்கள் அமைக்கும் அரசு குறித்து நாளை அறிவிப்பு வெளியாகும் என்றும் தலிபான் தலைவராக உள்ள ஹெபதுல்லா அகுன்சடா-வே அந்நாட்டின் தலைமைப் பொறுப்பையும் ஏற்க உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.  

விரைவில் புதிய அரசை அமைக்க இருக்கும் தலிபான்?

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் தலிபான்கள் அங்கு ஆட்சியை கைப்பற்றினர்.இதையடுத்து அந்நாடு எப்படி நிர்வகிக்கப்பட உள்ளது என்ற கேள்வி உலக நாடுகள் இடையே எழுந்துள்ளது.தங்கள் இயக்கத்தின் தலைவரே நாட்டின் தலைமைப் பொறுப்பையும் ஏற்பார் என காபூலில் பேசிய தலிபான் அமைப்பின் கலாசார குழு உறுப்பினர்களில் ஒருவரான அனுமுல்லசா சமங்கினி தெரிவித்தார்.

 மேலும் தாங்கள் அமைக்க உள்ள அரசு ஒரு முன்னுதாரண அரசாக திகழும் என தெரிவித்த அவர் பிரதமர் பதவியும் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார். தலிபான்களின் அரசியல் பிரிவு தலைவரான முல்லா பரடர் ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்பார் என்றும் தகவலும் சர்வதேச ஊடகங்களில்  செய்தி வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதற்கு அல் கய்தா அமைப்பு வாழ்த்து தெரிவித்துள்ளதாகவும், காஷ்மீர், பாலஸ்தீன் உள்ளிட்ட பகுதிகளை ஆயுதம் தாங்கிய விடுதலைப் போரின் மூலம் மீட்க வேண்டும் என்று வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாகவும் லாங் வார் ஜர்னல் என்ற அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.