ஆப்கானின் பிரதமராக தேர்வாகிறார் பயங்கரவாதி பட்டியலில் உள்ள நபர்..?!

ஆப்கானிஸ்தானின் பிரதமராக தாலிபான் தலைவர்களில் ஒருவரும், ஐநாவின் பயங்கரவாத பட்டியலில் உள்ளவருமான முல்லா ஹசன் அகுந்த் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய தாலிபான்கள் புதிய அரசை நிறுவ தீவிரமாக முயற்சித்து வரும் நிலையில், அதிகாரப் பகிர்வு குறித்து அந்த அமைப்புக்குள் பிரச்சனை எழுந்துள்ளது. முல்லா பரதர் தலைமையிலான தோகா பிரிவு, கிழக்கு  ஆப்கானிஸ்தானைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹக்கானி குழு, கந்தகார் பகுதியைச் சேர்ந்த பிரிவினர் ஆகியோர் இடையே உடன்பாடு ஏற்படாத சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில் அந்த அமைப்பைச் சேர்ந்த முல்லா ஹசன் அகுந்த் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். முல்லா பரதர் அவருக்கு அடுத்த பதவியில் இருப்பார் என்றும் ஹக்கானி குழுத் தலைவர் சிராஜ் ஹக்கானி  முக்கியமான அமைச்சரவைப் பதவியை வகிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசின் முக்கியமான பதவிகளை தங்கள் அமைப்பிற்கு ஒதுக்க ஹக்கானி குழுவினர் தாலிபான்களுக்கு அழுத்தம் தருவதாக கூறப்படுகிறது. இதனை தாலிபான் தலைவர் முல்லா அப்துல் பரதர் ஏற்றுக் கொள்ளாததால் கைகலப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.