"தாலிபான்கள் தான் எங்கள் பாதுகாவலர்கள்",. தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக டுவிட்டரில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்.! 

"தாலிபான்கள் தான் எங்கள் பாதுகாவலர்கள்",. தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக டுவிட்டரில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்.! 

தாலிபான்கள் தான் எங்கள் பாதுகாவலர்கள் என்ற ஹாஷ்டேக் பாகிஸ்தானில் டுவிட்டரில் டிரெண்டாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. . 

ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் படைகள் வெளியேறிய பிறகு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயுடன் இணைந்து தாலிபான் அமைப்பு  ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியது. அதன்பின் அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலை நடத்தி பல்லாயிரம் பேரை கொலை செய்த ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை தாக்கி கைப்பற்றியது.

அதன்பின் அங்கு தாலிபான் அமெரிக்க படைகள் இடையே போர் தொடர்ந்து நடைபெற்று வந்தது. மேலும் தாலிபான் அல்லாத புதிய அரசும் ஆப்கானிஸ்தானில் அமைந்தது. அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த, தலிபான் அமைப்பு மற்றும் ஆப்கன் அரசுக்கு இடையே, அமெரிக்கா மத்தியஸ்தம் செய்தது. ஆனால், முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க பாதுகாப்புப் படை திரும்பப் பெறப்பட்டுள்ளது.  

இந்நிலையில் பாகிஸ்தானில் தாலிபான்கள் தான் எங்கள் பாதுகாவலர்கள் என்ற ஹாஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. இதன் காரணமாக தாலிபான் படைகளுக்கு மக்களிடையே ஆதரவு பெருகி வருவது வெட்டவெளிச்சமாக தெரியவந்துள்ளது சர்வேதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.